Saturday, November 3, 2012

Wedding Invitation

இரு மனங்கள் இணையும் திருமணம்


பிரம்ம தேவனிடமிருந்து ஓர் அழைப்பிதழ் தூது விடப்பட்டது           திண்டுக்கல்லில் பிறந்த திருமகன்           சென்னையில் பிறந்த பூமகள்                                                          [அட நாங்க தாங்க !]இருவரையும் இணைக்கும் திருமண உடன்படிக்கையாம்.......... சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு, சொர்க்கம் வெகுதூரம் என்பதால்          திருமணம் அழகிய கேரளாவிலாம்......          வரவேற்பு விருந்து உபசரிப்பு திண்டுக்கல்லிலாம்
திருமணம் என்ற பெயரில் அழகிய இரு மனங்களை                                    சேர்த்து வைத்தான் இறைவன் ...... இவள் பெயருக்கு பின்னே அவன் பெயரும் சேர [பவித்ராகண்ணன்]
இப்படி ஒரு ஜோடியா என்று ஊரே நயந்து கூ,ஒருவரும் அறியாமல் இரு மனமும் ஒன்று சேர...எம்மில் ஒருவர் மற்றவரின் வளைக்கரம் பற்ற, எம் பெற்றோரும் உற்றாரும் மனமிணங்கஐம்பூதங்கள் அவையிருக்க, அக்னி முன்நிற்க....தேவரும் மூவரும் ஒரு சேர வாழ்த்தொலிக்க,யாவரும் சபையில் சிறப்புற கொலுவீற்றிருக்க....... உலகமே ஒன்று திரண்டும் இன்னும் காத்திருக்கிறோம்                 எதற்காக ?                                    உடனிருக்கும் உறவினர்களே .....                                    நட்பு நல்கிய நண்பர்களே......                                   அறிவை அளித்த ஆசான்களே.....                                    உங்கள் வருகைக்காக....... வாழ்த்துகளுக்காக………! எம்மை மனதார வாழ்த்திட வாருங்கள்...... தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்
        
கண்ணன் & பவித்ரா

No comments:

Post a Comment